Short News

புதுவைக்கு மோடி வரும் தேதி மாற்றம்!

புதுவைக்கு மோடி வரும் தேதி மாற்றம்!

புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லுக்கு பிரதமர் நரேந்தி மோடி பிப்ரவரி 28ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மோடி வரும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 28ம் தேதிக்கு பதிலாக பிப்.24ம் தேதி அவர் வருவதாக புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல்!

முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்று தொடங்கியுள்ளது. கலாமின் வீட்டிற்கு இன்று காலை சென்ற கமல், அங்கு கலாமின் உறவினர்களுடன் உரையாடினார். பின்னர் கலாமின் வீட்டிலேயே கமல் தன் காலை உணவையும் சாப்பிட்டார்.
கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

கலாம் படித்த பள்ளிக்கு வர கமலுக்கு அரசு தடை!

இன்று தன் அரசியல் பயணத்தை அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அவர் கலாம் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களை சந்திக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-ஜெயம்; ரிஷபம்-ஏமாற்றம்; மிதுனம்-இரக்கம்; கடகம்-சாந்தம்; சிம்மம்-ஆதாயம்; கன்னி-நிறைவு; துலாம்-வரவு; விருச்சிகம்-சுகம்; தனுசு-அமைதி; மகரம்-பேராசை; கும்பம்-போட்டி; மீனம்-நன்மை... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்.