Short News

அண்ணா சமாதியில் போலீசார் குவிப்பு!

அண்ணா சமாதியில் போலீசார் குவிப்பு!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியானதும் தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   
'அடங்காதே' படத்தின் முக்கிய அறிவிப்பு!

'அடங்காதே' படத்தின் முக்கிய அறிவிப்பு!

அறிமுக இயக்குநர். சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே' படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் டப்பிங் பணிகளை ஜி.வி முடித்தார். இந்த படத்தில் ஹீரோயினாக சுரபி நடித்துள்ளார். மற்றும் சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, மந்திரா பேடி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த கதாப்பாத்திரம் கிடைத்தது என் அதிர்ஷ்டம்: சரண்யா!

இந்த கதாப்பாத்திரம் கிடைத்தது என் அதிர்ஷ்டம்: சரண்யா!

வித்தியாசமான அம்மாவாக நடித்தத்தில் மகிழ்ச்சியடைவதாக நடிகை சரண்யா தெரிவித்துள்ளார். ராகேஷ் இயக்கத்தில் மீண்டும் எப்போதும்போல அம்மாவாக நடித்திருக்கிறார் சரண்யா. இந்நிலையில் படபிடிப்பின்போது சரி, டப்பிங் பேசும்போதும் சரி இந்த கதாப்பாத்திரத்தில் இருக்கும் வித்தியாசத்தை உணர முடிந்ததாகவும் சரண்யா கூறியுள்ளார்.
நிஜத்தில் 'விஸ்வரூபம்' எடுப்பேன்- கமல் பகீர்!

நிஜத்தில் 'விஸ்வரூபம்' எடுப்பேன்- கமல் பகீர்!

கமலின் 'விஸ்வரூபம் 2' படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டது. இந்த படம் ரிலீஸ் தொடர்ந்து அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கே விஸ்வரூபம்-3 வருமா? என்று கமலிடம் கேட்டதற்கு சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம்-3 எடுக்க போகிறேன்" என்றார்
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more