Short News

புரோக்கர் பேராசிரியை கைது!

புரோக்கர் பேராசிரியை கைது!

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த புகாரின் பேரில் சிக்கியுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை, அவரது வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேராசிரியை கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்குமுன்னதாக வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு அவர் உள்ளே இருந்ததால் 5 மணி நேரம் காத்திருந்துவிட்டு போலீஸார் திரும்பி சென்றனர்.
கோவையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

கோவையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவையில் இன்று மாலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிற்பகலில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. 
கனிஷ்க் கோல்டு மோசடி: ரூ.143 கோடி டெபாசிட் முடக்கம்!

கனிஷ்க் கோல்டு மோசடி: ரூ.143 கோடி டெபாசிட் முடக்கம்!

சென்னையில் இயங்கி வந்த பிரபல கனிஷ்க் நகைக்கடை பெரிய நகைக்கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ-யிடம் எஸ்பிஐ வங்கி முதலில் புகார் அளித்தது, இதையடுத்து, கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.143 கோடி வங்கி டெபாசிட் பணத்தை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
மே 4ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்!

மே 4ல் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்!

காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற 4 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் நல்ல ஒரு முடிவு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனை தமிழக தேசிய கட்சி தலைவர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.