Short News

ரஜினி, கமலை பொருத்திருந்து பார்ப்போம்: குஷ்பு!

ரஜினி, கமலை பொருத்திருந்து பார்ப்போம்: குஷ்பு!

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க ஆயுத்தமாக வருகின்றனர். இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரது அரசியல் களம் குறித்து எவ்வாறு கணிக்கிறீர்கள் என காங்கிரஸ் கட்சி செய்திதொடர்பாளர் குஷ்புவிடம் கேட்க்கப்பட்டது. அதற்கு பதில் குஷ்பு களத்திற்கு வந்த பிறகு தான் செயல்பாடுகள் குறித்து கணிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்.
வாரே வா..விஷாலுடன் கூட்டு சேர்ந்த சிம்பு!

வாரே வா..விஷாலுடன் கூட்டு சேர்ந்த சிம்பு!

நடிகர்களின் ஊதியம் குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்களின் செலவினம் குறைப்பது உள்ளிட்ட விஷயங்களை சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் நடிகர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த விஷாலும், சிம்புவும் இந்தக் கூட்டத்தில் நெருக்கமாக பேசினர். இதில், விஷாலுடன் சிம்பு தோளில் கைபோட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ரூ.100 கோடி வேண்டாம்: சன்னியாசியான ஜெயின் யூத்!

ரூ.100 கோடி வேண்டாம்: சன்னியாசியான ஜெயின் யூத்!

ரூ.100 கோடி சொத்தை உதறி தள்ளிவிட்டு அகமதாபாத் ஜெயின் இளைஞர் ஒருவர் சன்னியாசியானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகேஷ் ஷெத் என்ற இளைஞர் 2 ஆண்டுகளாக தங்களின் குடும்ப தொழிலை கவனித்து வந்தநிலையில் சன்னியாசியில் ஆர்வம் கொண்ட அவர், இன்று காந்திநகரில் நடைபெற்ற விழாவில் ஜைன மத துறவியானார். ஜைன மத துறவியானதால் தனது குடும்பத்தின் ரூ.100 கோடி சொத்தையும் தனது லக்ஸரி வாழ்க்கையையும் துறந்தார்.
கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

இன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்!