Short News

சென்னையில் உச்சகட்டப் பாதுகாப்பு!

சென்னையில் உச்சகட்டப் பாதுகாப்பு!

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை முதலே மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு தொற்றியது. கருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவால் சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை முன்பு மட்டும் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸாருக்கும் மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 1.20 லட்சம் கனஅடி, கபினியிலிருந்து 45 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.
இத்தாலியில் பாலம் விழுந்த விபத்தில் 20 பேர் பலி!

இத்தாலியில் பாலம் விழுந்த விபத்தில் 20 பேர் பலி!

இத்தாலியில் பிரபல துறைமுக நகரமான ஜெனோவில் திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது கட்டட இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. 
பள்ளி மாணவனுடன் தலைமறைவான கல்லூரி மாணவி!

பள்ளி மாணவனுடன் தலைமறைவான கல்லூரி மாணவி!

திருச்சி வையம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிளஸ் 2 மாணவனுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவனின் அக்கா கணவரும் மாணவியின் தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியும் மாணவனும் நேற்று இரவு வையம்பட்டி காவல் நிலையத்தில் சரணடந்தனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more