Short News

மீண்டும்..மீண்டும்..ரஜினியை வம்புக்கு இழுக்கும் சீமான்!

மீண்டும்..மீண்டும்..ரஜினியை வம்புக்கு இழுக்கும் சீமான்!

காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப வேண்டும் என்ற நோக்கம் காரணமாகவே காவலர் தாக்கப்பட்டத்தை கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சிறுமி விவகாரத்திற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிக்காது ஏன் எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவோ வி9 யூத் அறிமுகம்!

விவோ வி9 யூத் அறிமுகம்!

வி9 யூத் எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது விவோ நிறுவனம். கடந்த மாதம் வெளியான விவோ வி9 போலவே இந்தப் புதிய ஸ்மார்ட்போனும் உள்ளது. 6.3 இன்ச் FHD டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. 2 வண்ணங்களில் கிடைக்கும் இந்த வி9 யூத்தின் விலை ரூ.18,990 ஆகும்.
நிர்மலா தேவி விவகாரம்: 2 மதுரை பல்கலை. பேராசிரியர்கள் எஸ்கேப்!

நிர்மலா தேவி விவகாரம்: 2 மதுரை பல்கலை. பேராசிரியர்கள் எஸ்கேப்!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாகக் கைதாகியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேராசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர்களைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.
இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

நோடூலோசிஸ்டிக் அக்னே என்று சொல்லப்படுகிற இவை மிகவும் கடுமையானவை.எண்ணெய் மற்றும் இறந்த செல்கள், முகத்தின் சிறு துவாரங்களிலோ, மயிர்ப்புடைப்பின் மீதோ ஆழமாகப் படியும் போது இவை தோன்றுகின்றன. ஹார்மோன்கள் சீராக செயல்படாமல் இருக்கும்போது, எல்லா வயதிலும் பருக்கள் தோன்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது சாதாரணமான பருக்கள் தோன்றி மறைவது வழக்கம்.