Short News

சிறுநீர் விவகாரம்: மொழிபெயர்ப்பில் சிறு தவறு -இல.கணேசன் பேச்சு!

சிறுநீர் விவகாரம்: மொழிபெயர்ப்பில் சிறு தவறு -இல.கணேசன் பேச்சு!

சென்னைக்கு சமீபத்தில் வருகை புரிந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பொதுகூட்டத்தில் அவர் பேசிய போது எச்.ராஜா மொழிபெயர்த்தார். இதில் மைக்ரோ இரிகேஷன் எனப்படும் சொட்டு நீர் பாசனம் என்று சொல்வதற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என்று சொல்லியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில், அமித்ஷா பேச்சு மொழிபெயர்ப்பில் சிறு தவறு நடந்திருக்கிறது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்: லோக்சபாவில் இன்று நோ லஞ்ச்-பிரேக்!

நம்பிக்கையில்லா தீர்மானம்: லோக்சபாவில் இன்று நோ லஞ்ச்-பிரேக்!

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இத்தீர்மானத்தைக் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சியின் ஜெயதேவ் கல்லா விவாதத்தைத் தொடங்கி வைத்து, பா.ஜ.க. அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றங்களை சுமத்தி வருகிறார். இதற்கிடையே, விவாதங்கள் நடைபெறுவதால் இன்று மக்களவையில் உணவு இடைவேளை கிடையாதாம்!
மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி!

மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1.484 கோடி!

மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து 42 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அவர் கிட்டத்தட்ட 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்காக விமான பராமரிப்புச் செலவுக்கு மட்டும் ரூ.1088.42 கோடி செலவிடப்பட்டுள்ளது என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதை தவிர தனியார் விமானங்களுக்கு வாடகை ரூ. 387.26 கோடி, ஹாட்லைன் தொடர்புக்காக ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. 
ரூ.458... தினமும் 2.8 ஜி.பி....84 நாட்கள்: வோடஃபோன் அதிரடி!

ரூ.458... தினமும் 2.8 ஜி.பி....84 நாட்கள்: வோடஃபோன் அதிரடி!

ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டியைத் தொடர்ந்து கொடுத்து வருகிறது வோடஃபோன் நிறுவனம். தற்போது அது வழங்கும் ரூ.458 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் 2.8 ஜி.பி. டேட்டாவைப் பெறலாம். மேலும், வழக்கமான இலவச அழைப்புகள், எஸ்.எம்.எஸ். ஆகிய சலுகைகளும் இத்திட்டத்தில் உண்டு. தவிர, இந்தத் திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more