Short News

தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்த ஸ்டாலின்!

தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்த ஸ்டாலின்!

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர்ந்து, அடுத்த வாய்ப்பினை கடினமான உழைப்பின் மூலம் வென்றிட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
திமுக பிரமுகருக்கு கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி!

திமுக பிரமுகருக்கு கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து கடந்த 24ம் தேதி திருவாரூர் அருகே வடுவூரில் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கைதான திமுக பிரமுகர் சிவசந்திரனுக்கு காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கேக் ஊட்டியதால் சர்ச்சை வெடித்துள்ளது. அவர் காவல் நிலையத்திலே வைத்து திமுக பிரமுகருக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இந்த மாதிரி ஜீப்பை நீங்க பாத்திருக்கீங்களா?

இந்தியாவில் இந்த மாதிரி ஜீப்பை நீங்க பாத்திருக்கீங்களா?

இந்தியாவில் ஜீப் ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் என்றாலம் ஜீப் வைத்திருக்க வேண்டும், ஜமீந்தாரர்கள் எல்லாம் ஜீப் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. இதனால் பலர் ஜீப்களை வாங்க துவங்கினர். பலர் ஜீப் வாங்கியதால் அதில் சிலர் தங்கள் ஜீப்கள் வித்தியாசமாக தெரிவதற்காக அதை மாடிபிகேஷன் செய்ய துவங்கினர்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்!

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்!

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, பதற்றம் காரணமாக கடந்த 5 நாட்களாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். தற்போது, தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதால் இனி 144 தடை நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் தூத்துக்குடியில் இருந்து வழக்கம்போல் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more