Short News

முதல்முறையாக ஸ்டாலின்-எடப்பாடி சந்திப்பு!

முதல்முறையாக ஸ்டாலின்-எடப்பாடி சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதில்,போக்குவரத்து கழகங்களில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த திமுகவின் ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் ஸ்டாலின் அளித்தார். பழனிசாமியை அவரது அலுவலகத்தில் ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவி்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. மேலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், தோல்விகளுக்கு பொறுப்பேற்று, கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். இதனையடுத்து 11 வது புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜ்போரா சவுக் என்ற இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி பட்டேல் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும், காரில் இருந்த பட்டேலின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி, முன்னாள், முதல்வர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்!

மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்!

சென்னை, வியாசர்பாடியில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் ஜாபர் என்ற நபர் நேற்றிரவு தூங்கி கொண்டிருந்த தனது மனைவியின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடலை கைப்பற்றியை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்