ஈபிஎஸ் தலைமையில் 7வது அமைச்சரவைக் கூட்டம்!
தமிழகம்
- 2 month, 7 days ago
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில், நீட் தேர்வு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி தலைமையில் இதுவரை 6 முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.