Short News

ஸ்டெர்லைட் போராட்டம் இளைஞர்கள் கைது!

ஸ்டெர்லைட் போராட்டம் இளைஞர்கள் கைது!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி நகரில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களை இணைத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைதுசெய்தனர். அதேபோல பனிமயமாதா பேராலயத்தின் வளாகத்தில் அமர்ந்து, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சிரியாவில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல்!

சிரியாவில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல்!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல் நுஸ்ரா தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டமாஸ்கஸின் தெற்குப் பகுதிகளில் இத்தீவிரவாதிகளின் நடமாட்டம் பெரும்பாலும் இருப்பதால், அங்கு கடந்த 2 நாட்களாக விமானப்படைத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த எண்ணெயை பத்தி கேள்விப்பட்டா உங்க கை சும்மாவே இருக்காது...

இந்த எண்ணெயை பத்தி கேள்விப்பட்டா உங்க கை சும்மாவே இருக்காது...

எலேமி அத்தியாவசிய எண்ணெய் எலேமி அல்லது 'கேனாரியம் லோசோனிக்' மரத்திலிருந்து வருகிறது. இந்த மரங்கள் பிலிப்பைன்ஸ் மற்றும் பிற அண்டை நாடுகளில் உள்ளன. மரத்தின் பிசினிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு நீராவி வடித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது மஞ்சள் நிறத்தில் வெளிர் நிறமாகவும், கூர்மையான பைன் மற்றும் எலுமிச்சை மணம் கொண்டதாகவும் உள்ளது. எலேமி ,

தங்கம் விலை சிறிது குறைவு!

தங்கம் விலை சிறிது குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,994 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,952 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,450க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.