Short News

2 நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து:தமிழக அரசு அறிவிப்பு!

2 நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து:தமிழக அரசு அறிவிப்பு!

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று சென்னையில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பே தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கருணாநிதி உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த 2 நாட்களில் நடப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாலை 04:20க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

மாலை 04:20க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று மாலை 4.20 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-35; மதுரை-35; கோயம்புத்தூர்-28; திருச்சி-35; திருநெல்வேலி-33; திண்டுக்கல்-35; ஈரோடு-33; சேலம்-34; சிவகாசி-32; தஞ்சாவூர்-38; தூத்துக்குடி-35; திருப்பூர்-33; வேலூர்-36; ஊட்டி-15; கொடைக்கானல்-19; ஏற்காடு-29; ஏலகிரி-33; வேடந்தாங்கல்-35.
தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை விலையைவிட மாலையில் கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,804 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.22,432 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.29,440க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நல்ல உயர்வுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

நல்ல உயர்வுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று பங்கு வர்த்தகம் அபார ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 284.32 புள்ளிகள் உயர்ந்து 37,947.90 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 85.70 புள்ளிகள் அதிகரித்து 11,470.80 புள்ளிகளாக இருந்தது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more