Short News

இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலை மிதமான குளிர் நிலவியது. காலை 07.40 மணிக்கு 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகலில் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையும் பதிவாகும். இன்றும் வானில் மேகக்கூட்டங்கள் இருக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 06:32, மறைவு: மாலை 06:15; சந்திர உதயம்: அதிகாலை 05:17, மறைவு: மாலை 05:04.
'தல'யுடன் நடிக்க வந்த வாய்ப்பை இழந்த இளம் நடிகர்!

'தல'யுடன் நடிக்க வந்த வாய்ப்பை இழந்த இளம் நடிகர்!

அஜீத்துடன் நடிக்க வந்த வாய்ப்பை இழந்து தவித்து வருகிறார் இளம் நடிகிறார் விஷ்வந்த். இவர் 'கபாலி'படத்தில் ரஜினியுடன் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேசப்படும் நடிகராக வளர்ந்துள்ளார்இவர் வீரம் படத்தில் அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால், வேறொரு படத்தில் நடித்து கொண்டிந்ததால் அந்த வாய்ப்பை தவறவிட்டதாக வேதனை பட்டு வருகிறார்
இதை ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..!

இதை ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..!

உயர்ந்த குறிக்கோள் இருந்தாலே போதும், வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? அது தவறு, உயர்ந்த குறிக்கோள் மட்டும் ஒருவனை வெற்றிக்கு ஈட்டுச் செல்லாது. அத்துடன் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்களுடைய நடை, உடை, பாவனைகள், பிறரிடம் பேசும் முறை போன்றவைக்கு உங்களின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு உண்டு.

5ஜி ரோட்மேப் ஜூன் மாதம் முதல்!

5ஜி ரோட்மேப் ஜூன் மாதம் முதல்!

தற்போது இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி தொழில்நுட்பத்தில் இருந்து 5ஜி தொழில்நுட்பத்திற்கு தயாராகி வருகின்றன. மேலும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கான புதிய டெலிகாம் செயல்திட்டங்களை இந்திய தகவல் தொடர்பு துறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும், இதன் மூலம் இயங்கும் ரோட்மேப் தொழில்நுட்பம் வரும் ஜூன் மாத இறுதியில் வெளியாகும் என டெலிகாம் துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் அறிவித்துள்ளார்.