Short News

இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையில் மிதமான வெப்பம் நிலவியது. காலை 7.40 மணிக்கு 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று பெரும்பாலும் மேகமூட்டம் இருக்கும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:43, மறைவு: மாலை 06:28; சந்திர உதயம்: காலை 07:21, மறைவு: இரவு 08:29.
ட்விட்டரில் கமலை பின் தொடரும் 50 லட்சம் பேர்!

ட்விட்டரில் கமலை பின் தொடரும் 50 லட்சம் பேர்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியை தொடங்குவதற்கு முன்பே அரசியல் தொடர்பான கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்து வந்தார். கமல் செய்வது வெறும் ட்விட்டர் அரசியல் தான் என்ற விமர்சனங்களும் இதனைத்தொடர்ந்து எழுந்தது. இதனிடையே ட்விட்டரில் கமலை பின் தொடர்வோர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டுள்ளது.
சிகிச்சைகாக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!

சிகிச்சைகாக அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்!

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும் இணைந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை மெரினாவில் 1000 போலீசார் குவிப்பு!

சென்னை மெரினாவில் 1000 போலீசார் குவிப்பு!

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் தமிழ் தேசிய இயக்கங்கள் நினைவேந்த கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.