Short News

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ நடைப்பயணம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ நடைப்பயணம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நான்கு நாள் நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வருகிற 17,18 மற்றும் 21, 22 உள்ளிட்ட தேதிகளில் தூத்துக்கடி மாவட்டத்தில் இந்த நடைப்பயணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடைப்பயணத்தின்போது மக்களை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையின் தீங்கு குறித்து மக்கள் இடத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சிபிசிஐடி போலீஸ் சீல் வைத்தது. அவரது வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது
எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

செய்தியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது எஸ்வி சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், எஸ்வி சேகர் 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
”பாஜகவுடன் ஜெகன்மோகன் கூட்டு!”

”பாஜகவுடன் ஜெகன்மோகன் கூட்டு!”

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மோடியுடன் சேர்ந்துகொண்டு ஆந்திர மாநிலத்தில் முழு அடைப்பு நடத்தியதன் மூலம் ஆந்திராவுக்கு எதிர்க்கட்சிகள் அநீதி இழைத்துள்ளதாகவும் நாயுடு கூறியுள்ளார்.