Short News

பிரபலங்களால் நிறைந்த இருக்கைகள்.. சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரை!

பிரபலங்களால் நிறைந்த இருக்கைகள்.. சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரை!

தற்போது சென்னை காமராஜர் அரங்கத்தில் வைரமுத்து உரையாற்றி வருகிறார். இதில் வைரமுத்து மறைமலையடிகள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை' கட்டுரையை அரங்கேற்றம் செய்கிறார். வைரமுத்துவின் உரையை கேட்க பிரபலங்கள் திரண்டுள்ளனர். இயக்குநர் சீமான், கவுதமன், நடிகை கஸ்தூரி, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள்.

ஆணவ கொலைக்கு கமல் குரல் கொடுங்க- பாலகிருஷ்ணன்!

ஆணவ கொலைக்கு கமல் குரல் கொடுங்க- பாலகிருஷ்ணன்!

கலாம் வீட்டில் இருந்து இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர், இந்நிலையில், "கமல் கட்சி தொடங்கியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை, ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கமல் குரல் கொடுக்க வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கமல் பொதுக்கூட்டத்தில் செல்போன் திருட்டு!

கமல் பொதுக்கூட்டத்தில் செல்போன் திருட்டு!

நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, கட்சிக்கான உயர்மட்ட நிர்வாகிகள் அறிவித்தார். மேலும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை இன்றே தொடங்கி வைத்தார். இந்நிலையில், கமல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த பலரின் செல்போன் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த திருட்டு குறித்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களின் கேள்விக்கு பதிலளித்த முதல் அரசியல்வாதி கமல்!

மக்களின் கேள்விக்கு பதிலளித்த முதல் அரசியல்வாதி கமல்!

தனது அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களின் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது, - எதற்கு ராமேஸ்வரம்? எதற்கு கலாம்? என்ற கேள்விக்கு, கலாம் வீடு இருக்கும் இடம் ராமேஸ்வரம், அதனால் அங்கு சென்றேன் என்று பதிலளித்தார், மேலும் - இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்? என்ற கேள்விக்கு, இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன், இனி உங்கள் இல்லங்களில் இருப்பேன் என்றார்.