Short News

விஜயதரணி குதர்க்கமாக பேசுகிறார்- சீறும் திருநாவுக்கரசர்!

விஜயதரணி குதர்க்கமாக பேசுகிறார்- சீறும் திருநாவுக்கரசர்!

ஜெயலலிதா படத்திறப்பு தொடர்பாக விஜயதரணி எம்எல்ஏ பேசியது சரியல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார். மேலும் பேசிய அவர், "விஜயதரணி சபாநாயகரை, முதல்வரை வாழ்த்தியதுடன் வரம்பு மீறி பேசியுள்ளார், அவரது குதர்க்கமான பேச்சு காங்கிரசை புறக்கணிப்பதாக எண்ண தோன்றுகிறது, ராகுல் காந்தியை கேள்வி கேட்க விஜயதரணி யார்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி: சென்னையில் சரத் உண்ணாவிரதம்!

காவிரி: சென்னையில் சரத் உண்ணாவிரதம்!

சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் அவருடன் சமத்துவ மக்கள் கட்சியின் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-33; மதுரை-33; கோயம்புத்தூர்-31; திருச்சி-32; திருநெல்வேலி-31; திண்டுக்கல்-32; ஈரோடு-32; சேலம்-32; சிவகாசி-30; தஞ்சாவூர்-33; தூத்துக்குடி-32; திருப்பூர்-29; வேலூர்-32; ஊட்டி-19; கொடைக்கானல்-20; ஏற்காடு-26; ஏலகிரி-31; வேடந்தாங்கல்-33.
சிறு சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

சிறு சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் 3ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் சற்று இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 17.38 புள்ளிகள் சரிந்து 34,599.26 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 9.4 புள்ளிகள் குறைந்து 10,604.95 புள்ளிகளாக இருந்தது.