Short News

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வடகடலோர பகுதி மற்றும் புதுச்சேரியில் 50 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 3.5 முதல் 4.3 மீட்டர் உயரம் வரை எழும்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலில் காற்றின் வேகம் இன்று அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
8 வழி பசுமைசாலைக்கு எதிர்ப்பு:  வளர்மதி கைது!

8 வழி பசுமைசாலைக்கு எதிர்ப்பு: வளர்மதி கைது!

சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சேலம் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மற்றும் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் இந்தி பெயர் பலகை வைத்த கண்டக்டர் சஸ்பெண்ட்!

பேருந்தில் இந்தி பெயர் பலகை வைத்த கண்டக்டர் சஸ்பெண்ட்!

பெருந்துறை சிப்காட்டில் இருந்து வார சந்தைக்கு செல்லும் 17-ம் எண் பேருந்தில் இந்தி பெயர் பலகை வைக்கப்பட்டு வந்தது. வடமாநில தொழிலாளர்களுக்காக இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து பெருந்துறை சிப்காட் பேருந்தில் இந்தி பெயர் பலகை அகற்றப்பட்டது. அத்துடன் இந்தியில் பெயர் பலகை வைத்த கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டவுன் பேமண்ட் இல்லாமல் ஐபோன்: ஆப்பிளின் அசத்தல் சலுகை!

டவுன் பேமண்ட் இல்லாமல் ஐபோன்: ஆப்பிளின் அசத்தல் சலுகை!

ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X ஆகிய போன்களை ஜீரோ டவுன் பேமண்ட் வசதியுடனே மாதத் தவணை முறையில் வாங்க முடியும். 18 மாதத் தவணையில் இவற்றை வாங்கினால் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும். ஜூன் 15 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்தச் சலுகையை அளித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். சில கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது 5% கூடுதல் கேஷ்பேக் வசதியும் உண்டு.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more