Short News

எஸ்.வி சேகருக்கு எதிராக களமிறங்கிய மாதர் சங்கம்!

எஸ்.வி சேகருக்கு எதிராக களமிறங்கிய மாதர் சங்கம்!

பெண் பத்திரிகையாளர்கள் இழிவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பகிர்ந்த நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி சேகரை உடனடியாகக் கைது செய்யக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு எஸ்.வி சேகருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

சர்ச்சை தலைப்புடன் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. இந்நிலையில் அதே பாணியில் சர்ச்சை தலைப்புடன் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகின்றனர். படத்திற்கு "பல்லு படாம பாத்துக்க" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடல் பைக்கை செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக் யுஎம் ட்யூட்டி 230 என்ற பெயரில் வெளியாகிறது. தற்போது 4 க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களையும், ஒரு மின்சார மாடலையும் யுஎம் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.