Short News

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: தமிழிசை!

சமீபத்தில் தமிழகத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழத்தில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது என தமழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி என்பதை புவனேஷ்வர்குமார் வெளிப்படுத்தியுள்ளார். வேகத்தை குறைத்து பந்துகளை வீசும்போது பேட்ஸ்மேன் ரன் குவிக்க திணறுவார். மேலும் அப்போது சரியான நீளத்தில் வீசப்படும் பந்துகள் அவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும். தொடர்ந்து இதனை கடைபிடிக்கும்போது விக்கெட்கள் சரிய வாய்ப்பு உள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஜியோ வந்த பிறகு சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க அதிரடி செலுகைகளை அறிவித்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளன.
மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட காதலர்கள்!

மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட காதலர்கள்!

சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறு கத்தி தகராறாக மா ஒருவரையொருவர் மாறி மாறி கத்தியால் குத்திகொண்டனர். இதனையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.