Short News

ஏர்டெல்-வோடஃபோனுக்கு மாறிய 60 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள்!

ஏர்டெல்-வோடஃபோனுக்கு மாறிய 60 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள்!

கடும் நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது. இதையடுத்து அதன் வாடிக்கையாளர்கள் வேறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். அதன்படி, இதுவரை சுமார் 60 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர். மேலும், பி.எஸ்.என்.எல்.லுக்கும் 8 லட்சம் பேர் மாறியுள்ளனராம்!
கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

கெயில் கையில் ஆரஞ்ச் கேப்!

இன்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கெய்ல் 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்குமுன் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தார். 2வதாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 3 போட்டிகளிலும் 229 ரன்கள் குவித்துஸ அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றார் கெயில்! 
படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

படபிடிப்புக்கு திரும்பிய சுருதிஹாசன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சுருதிஹாசன் படபிடிப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது வித்யூத் ஜம்வாலுடன் இணைந்து சுருதி நடித்து வருகிறார். காதல், ஆக்‌ஷன் கலந்த இந்த படத்தின் நாயகன் துப்பாக்கி பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அனைத்து மொழி படங்களிலும் நடிக்க சுருதி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.