Short News

எழுத்தை எண்ணும் பேனா: சிறுவனின் சாதனை கண்டுபிடிப்பு!

எழுத்தை எண்ணும் பேனா: சிறுவனின் சாதனை கண்டுபிடிப்பு!

எழுதும் வார்த்தைகளை எண்ணும் பேனாவை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 9வயது பள்ளி சிறுவன். குரேஸ் மாவட்டத்தை சேர்ந்த முசாஃபர் அகமத் கான் என்ற சிறுவன் தனது முதல்  கண்டுபிடிப்பாக எழுத்தை எண்ணும் தொழிற்நுட்பம் அடங்கிய பேனாவை வடிவமைத்துள்ளார்.
இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

நோடூலோசிஸ்டிக் அக்னே என்று சொல்லப்படுகிற இவை மிகவும் கடுமையானவை.எண்ணெய் மற்றும் இறந்த செல்கள், முகத்தின் சிறு துவாரங்களிலோ, மயிர்ப்புடைப்பின் மீதோ ஆழமாகப் படியும் போது இவை தோன்றுகின்றன. ஹார்மோன்கள் சீராக செயல்படாமல் இருக்கும்போது, எல்லா வயதிலும் பருக்கள் தோன்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது சாதாரணமான பருக்கள் தோன்றி மறைவது வழக்கம்.

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

ஆந்திராவை தமிழகம் போல மாற்ற பாஜக முயற்சி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 12 மணிநேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர் மாநில உரிமைகளில் சமரசத்திற்கு இடமில்லை எனக் கூறினார்.
டி20 லீக் சூதாட்டம்: நொய்டாவில் தொடங்கிய கைது நடவடிக்கை!

டி20 லீக் சூதாட்டம்: நொய்டாவில் தொடங்கிய கைது நடவடிக்கை!

ராஜஸ்தான், சென்னை அணிக்கு எதிரான போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நொய்டாவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 21 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.