Short News

58 கோடி போலி ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்!

58 கோடி போலி ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. தகவல் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம், போலி செய்திகள் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி இருக்கிறது. இந்நிலையில் அதிரடியாக போலி கணக்குகளை ஃபேக்புக் நிறுவனம் தொடர்ந்து முடக்கி வருகிறது.
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது!

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது!

தூத்துக்குடியில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது,பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு இன்று அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் முழுமையாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர்  நந்தூரி தெரிவித்துள்ளார்.
தமிழக எல்லையில் கேரளா பேருந்துகள் நிறுத்தம்!

தமிழக எல்லையில் கேரளா பேருந்துகள் நிறுத்தம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதில் தமிழக- கேரள எல்லையான நாகர்கோவில் களியக்காவிளையில் கேரள அரசுப்பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. மேலும் தேனி எல்லையிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பரிதவித்து வருகின்றனர்.
பந்த் எதிரொலி: திருப்பூரில் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு!

பந்த் எதிரொலி: திருப்பூரில் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு!

பிரதான எதிர்க்கட்சியான திமுக அறிவித்த பந்த் இன்று காலை தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பந்த் காரணமாக தொழில் நகரமான திருப்பூரில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கவில்லை. இதனால் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more