Short News

போலி அடிடாஸ் மெஸேஜ்: உஷார் மக்களே!

போலி அடிடாஸ் மெஸேஜ்: உஷார் மக்களே!

அனைவரது வாட்ஸ் அப்பிலும் தற்போது பிரபல அடிடாஸ் ஷூ நிறுவனத்தின் விளம்பரம் வைரலாகி வருகிறது. இதில் அடிடாஸ் ஷூக்கள் வேண்டும் என்றால் இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்ற மெஸேஜ் பரப்பப்பட்டு வருகிறது.இது போலி அடிடாஸ் மெஸேஜ் என்று சைபர் க்ரைம் எச்சரித்துள்ளது. இதனால் சில மாதங்களுக்கு முன் பிரிட்டனில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கம் இன்று காலை விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2,998 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,984 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,470க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பாஜக உறுப்பினர் அலுவலகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை!

பாஜக உறுப்பினர் அலுவலகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை!

பாஜக கட்சியை சேர்ந்த வினித் கோயங்கா நடத்தும் மும்பை அலுவலகம் ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை நடத்தி இருக்கிறது. அந்த அலுவலகத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் முறையாக லைசன்ஸ் வாங்கியதா என்பதை சோதிக்க இப்படி செய்து இருக்கிறார்கள்.  இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய செயலாளர் ராஜிவ் சௌதி பாஜக கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். 
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று மாலை 3.15 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-36; மதுரை-39; கோயம்புத்தூர்-37; திருச்சி-39; திருநெல்வேலி-41; திண்டுக்கல்-42; ஈரோடு-42; சேலம்-42; சிவகாசி-41; தஞ்சாவூர்-43; தூத்துக்குடி-39; திருப்பூர்-41; வேலூர்-43; ஊட்டி-19; கொடைக்கானல்-25; ஏற்காடு-38; ஏலகிரி-41; வேடந்தாங்கல்-41.