Short News

மிட்ரேன்ஜ் விலையில் மிரட்டும் நோக்கியா எக்ஸ்; ஏப் 27-ல் ரெடியா இருங்க!

மிட்ரேன்ஜ் விலையில் மிரட்டும் நோக்கியா எக்ஸ்; ஏப் 27-ல் ரெடியா இருங்க!

  • நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள HMD குளோபல், கடந்த சில ஆண்டுகளில் பல நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி விட்டது.
  • அதில் நோக்கியா 3310 (2017) போன்ற பீச்சர் மொபைல்களும் அடங்கும், நோக்கியா 8 சிரோக்கோ போன்ற ஹை-எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.
  • இதனால் இந்தியாவில் துவண்டு போய் கிடந்த நோக்கியாவின் சந்தை, ஆக்ரோஷமான வளர்ச்சியை அடைந்தது.
நிர்மலா தேவி விவகாரம்: 2 மதுரை பல்கலை. பேராசிரியர்கள் எஸ்கேப்!

நிர்மலா தேவி விவகாரம்: 2 மதுரை பல்கலை. பேராசிரியர்கள் எஸ்கேப்!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாகக் கைதாகியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேராசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர்களைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.
இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

இப்படி வரும் வலிமிகுந்த பருக்களை சரிசெய்ய என்ன செய்யலாம்?

நோடூலோசிஸ்டிக் அக்னே என்று சொல்லப்படுகிற இவை மிகவும் கடுமையானவை.எண்ணெய் மற்றும் இறந்த செல்கள், முகத்தின் சிறு துவாரங்களிலோ, மயிர்ப்புடைப்பின் மீதோ ஆழமாகப் படியும் போது இவை தோன்றுகின்றன. ஹார்மோன்கள் சீராக செயல்படாமல் இருக்கும்போது, எல்லா வயதிலும் பருக்கள் தோன்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது சாதாரணமான பருக்கள் தோன்றி மறைவது வழக்கம்.

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

இது தமிழகம் அல்ல: பாஜகவுக்கு சவால்விடும் நாயுடு!

ஆந்திராவை தமிழகம் போல மாற்ற பாஜக முயற்சி செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்க கோரி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 12 மணிநேரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர் மாநில உரிமைகளில் சமரசத்திற்கு இடமில்லை எனக் கூறினார்.