Short News

திருடப்பட்ட பிட்காயினை கண்டுபிடித்தால் 2கோடி பரிசு!

திருடப்பட்ட பிட்காயினை கண்டுபிடித்தால் 2கோடி பரிசு!

இணையத்தில் திருடப்பட்ட சுமார் 20 கோடி மதிப்பிலான பிட்காயின்களை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 2 கோடி பரிசு தொகையாக வழங்கப்படும் என காயின்செக்யூர் நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது கணினியில் ரகசிய கடவுச்சொல் மூலம் பாதுகாப்பாக வைத்திருந்த பிட்காயினை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.
திருச்சி அருகே தடம்புரண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ்!

திருச்சி அருகே தடம்புரண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ்!

காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் இன்று காலை திடீரெனத் தடம்புரண்டது. திருச்சிக்கு வருவதற்குள், கிராப்பட்டி அருகே அந்த ரயிலின் என்ஜின் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. குறித்த நேரத்திற்கு அந்த ரயில் திருச்சி வந்து சேராததால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
மன்சூர் அலிகான் விடுதலை!

மன்சூர் அலிகான் விடுதலை!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, சீமானுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். கடந்த 13-ந் தேதி முதல் சென்னை புழல் சிறையில் மன்சூர் அலிகான் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்ததையடுத்து, இன்று சென்னை புழல் சிறையிலிருந்து மன்சூர் விடுதலை செய்யப்பட்டார்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 8.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-30; மதுரை-30; கோயம்புத்தூர்-28; திருச்சி-30; திருநெல்வேலி-28; திண்டுக்கல்-26; ஈரோடு-27; சேலம்-29; சிவகாசி-28; தஞ்சாவூர்-28; தூத்துக்குடி-28; திருப்பூர்-27; வேலூர்-27; ஊட்டி-16; கொடைக்கானல்-16; ஏற்காடு-23; ஏலகிரி-26; வேடந்தாங்கல்-30.