Short News

சோலார் பீம் டிரோன்!

சோலார் பீம் டிரோன்!

இண்டெர்நெட்டை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் மற்றொரு முயற்சியாகவே இந்த சோலார் பீம் டிரோன் பார்க்கப்படுகிறது. நிலத்தில் இருந்து சுமார் 150 அடிக்கு மேல் பறக்கும் வல்லமை பெற்ற இந்த டிரோனில் 3 ஆயிரத்திற்கு அதிகமான சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் 7கிலோ வாட் மின்சாரம் மூலம் 3ல் இருந்து 5 வருடங்கள் வரையில் கூட இந்த சோலார் பீம் டிரோனால் நிற்காமல் பறக்க முடியும்.
210 மீட்டர் உயர ஹோட்டலில் இருந்து குதித்த வீரர்!

210 மீட்டர் உயர ஹோட்டலில் இருந்து குதித்த வீரர்!

ஸ்பெயினில் 210 மீட்டர் உயர ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து சாகச வீரர் கண்போரை கதிகலங்க வைத்தார். கார்லோஸ் பிரிஸ்ஸினோ என்ற அந்த வீரர் பூமியை நோக்கி குதித்த 5 வினாடிகளில் தனது பாராசூட்டை விரிந்து பத்திரமாக தரையிறங்கினார். இந்த காட்சியை ஏராளமானோர் தங்களது ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்தனர்.
விவோ வி9 யூத் அறிமுகம்!

விவோ வி9 யூத் அறிமுகம்!

வி9 யூத் எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது விவோ நிறுவனம். கடந்த மாதம் வெளியான விவோ வி9 போலவே இந்தப் புதிய ஸ்மார்ட்போனும் உள்ளது. 6.3 இன்ச் FHD டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. 2 வண்ணங்களில் கிடைக்கும் இந்த வி9 யூத்தின் விலை ரூ.18,990 ஆகும்.
கூடுதல் வசதியுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி-500!

கூடுதல் வசதியுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி-500!

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரை 3வது முறையாக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அதிக சிறப்பம்சங்களுடன் கூடுதல் திறன் வாய்ந்த எஞ்சினுடன் மெருகு ஏற்றப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. அதிக வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இந்த கார் தறபோது  வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் எஞ்சின் 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கப்பட்டுள்ளது.