Short News

சியோமியின் எம்ஐ டி.வி (Mi TV-4) ரிலீஸானது!

சியோமியின் எம்ஐ டி.வி (Mi TV-4) ரிலீஸானது!

காதலர் தினத்தை முன்னிட்டு சியோமியின் Mi 4 டி.வி. இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. இது ஹெச்.டி.ஆர். தொழில்நுட்பத்தில் புதிய டி.வி. 4K பேனல், 4.9 மில்லிமிட்டர் அளவே மெல்லிய தடிமன் கொண்டுள்ளது. இந்த டிவி கடந்த ஆண்டு சீனாவில் மே மாதம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ச்வால் இன்டர்ஃபேஸ், ஃபிரேம்லெஸ் வடிவில் வெளியாகி வருகிறது. ஒற்றை ரிமோட் மூலம் இந்த  டி.வி, செட்-டாப் பாகஸ் இயக்கலாம்.
ஜேம்ஸ் பாண்ட் படம்: கிறிஸ்டோபர் நோலன் மறுப்பு!

ஜேம்ஸ் பாண்ட் படம்: கிறிஸ்டோபர் நோலன் மறுப்பு!

ஜேம்ஸ் பாண்ட்டின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை என பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜேம்ஸ் பாண்ட் சிரிஸின் புதிய பாகத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கிறிஸ்டோபர் நோலன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

என்னை விட பெரிய செல்வந்தர்கள் இருந்தாலும் நான் தான் அதிகமான வரியை செலுத்துவதாக பிரபல தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் பில் கேட்சை அமேசான் நிறுவத்தின் சிஇஓவின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ஐ.எஸ்.தீவிரவாத பெண்ணுக்கு தூக்கு!

துருக்கி ஐ.எஸ்.தீவிரவாத பெண்ணுக்கு தூக்கு!

ஈராக்கில் அரசுப் படையினரிடம் சரண் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் சரணடைந்த ஐ.எஸ் தீவிரவாத பெண்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொரு துருக்கி நாட்டு பெண்ணுக்கு தூக்கு தண்டனையும் விதித்து இன்று  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு நீதிமன்ற செய்தி தொடர்பாளர் அப்துல் சத்தார்  தெரிவித்தார்.