Short News

டெலிட் பைல்களை மீட்கும் வாட்ஸ் அப் அப்டேட்...!

டெலிட் பைல்களை மீட்கும் வாட்ஸ் அப் அப்டேட்...!

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின்படி பயனாளர்கள் நீக்கப்பட்ட மீடியா பைல்களான புகைப்படம், வீடியோ மற்றும் ஜிஃப் பைல்களை மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியும். வாட்ஸ் அப்பில் ஏற்கனவே பதிவு செய்த எண்ணிற்கு பதிலாக புதிய எண்ணை எந்த சிரமமுமின்றி மாற்றிக்கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.
பட்ட பகலில் கொள்ளை... சென்னையில் பரபரப்பு!

பட்ட பகலில் கொள்ளை... சென்னையில் பரபரப்பு!

சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ. 6 லட்சம் கொள்ளையடிக்க முயன்றார். பணத்துடன் தப்பியோட முயன்ற நபரை காவல்துறையினர் உடனடியாக பிடித்தனர். இதையடுத்து, கைது செய்த அந்த நபரிடம் சாஸ்திரி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியை சந்தித்த குருமூர்த்தி!

ரஜினியை சந்தித்த குருமூர்த்தி!

கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த்தை 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தது முதல் ரஜினியை பா.ஜ.க.வின் பிம்பம் என அரசியல் கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்நிலையில் இருவரும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.