ஆயாவுக்கு யாரு ‘பேபி‘ னு பேரு வெச்சா.. ஊர்வசி செய்த தரமான சம்பவம்.. ஜெ. பேபி‘ டிரைலர் ரிலீஸ் !
பா.ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெ. பேபி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெ. பேபி' ஊர்வசி, மாறன், தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து நெடுமரம் என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.