தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
சென்னை: தமிழகத்தில் வீடில்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் படிப்படியாக வீடு கட்டித்தரப்படும் என்ற புதிய வாக்குறுதியை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் தின பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.