20-இன்ச் சக்கரங்களுடன் கியா சொனெட்டை பார்த்திருக்கீங்களா?!
20 இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. செல்டோஸ் எஸ்யூவி கார் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மூன்றாவது மாடலாக சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மற்ற கார்களை போன்று சொனெட்டிற்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தைக்கு பிறகான ஆக்ஸஸரீகளை வழங்கியுள்ளது.