இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் தொடர்ந்து பல முதலீட்டு சேவைகளைத் தனது பேடிஎம் மனி வாயிலாக அளித்து வரும் நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும், இளம் டெக் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் விதமாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது. இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்காகவே பிரத்தியேகமாகப் பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் மனி தளத்தின் வாயிலாக மீரே அசட் NYSE FANG+ EFT உடன் கூட்டணி வைத்து அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.