அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கருணாஸ் பரபரப்பு பேட்டி
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், பாஜக-அதிமுக கூட்டணி தமிழக மக்களுக்கு எதிரானது. பாஜக ஆட்சி எப்போதுமே தமிழர் நலனுக்கு விரோதமானது. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது கேலிக்கூத்தாக இருக்கிறது. மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி வரக் கூடாது. தமிழகத்தை அவர் வெறும் ஓட்டு வங்கியாக பார்க்கிறார். நான், தமிமுன் அன்சாரி, தனியரசு இந்தக் கூட்டணியை ஏற்கவே மாட்டோம்" என்றார்.