World Short News

கங்காருவை கொடுமைபடுத்தி கொன்ற சுற்றுலா பயணிகள்!

கங்காருவை கொடுமைபடுத்தி கொன்ற சுற்றுலா பயணிகள்!

சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் இருக்கும் வன உயிரியல் பூங்காவில் காண வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர், அமைதியாக உறங்கி கொண்டுருந்த கங்காருவை பார்த்து ஆத்திரமடைந்தனர். கங்காருவை எழுப்ப கல்லால் அடித்துள்ளனர். இதனால் காயமடைந்த கங்காரு உயிரிழந்தது. இத்தகைய செயலை பார்க்கும்போது இதில் யார் மிருகம் என்ற சந்தகம் அனைவருக்கும் எழுகிறது.
210 மீட்டர் உயர ஹோட்டலில் இருந்து குதித்த வீரர்!

210 மீட்டர் உயர ஹோட்டலில் இருந்து குதித்த வீரர்!

ஸ்பெயினில் 210 மீட்டர் உயர ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து சாகச வீரர் கண்போரை கதிகலங்க வைத்தார். கார்லோஸ் பிரிஸ்ஸினோ என்ற அந்த வீரர் பூமியை நோக்கி குதித்த 5 வினாடிகளில் தனது பாராசூட்டை விரிந்து பத்திரமாக தரையிறங்கினார். இந்த காட்சியை ஏராளமானோர் தங்களது ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்தனர்.
அமெரிக்கா: காதலர் மனைவியை கொல்லத் திட்டமிட்ட இந்திய நர்ஸ்!

அமெரிக்கா: காதலர் மனைவியை கொல்லத் திட்டமிட்ட இந்திய நர்ஸ்!

அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் உள்ள லயோலா மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரியும் டினா ஜோன்ஸ், அதே மருத்துவமனையைச் சேர்ந்த திருமணமான டாக்டரைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், அந்த டாக்டரின் மனைவியைக் கொல்ல கூலிப்படை ஒன்றை ஆன்லைன் மூலம் நாடியுள்ளார் டினா. இத்தகவலை அறிந்த போலீசார், டினாவைக் கைது செய்தனர். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் டினா.
இஸ்ரேலிய ராணுவ வீரர் நடத்திய தாக்குதல்: 4 பேர் பலி!

இஸ்ரேலிய ராணுவ வீரர் நடத்திய தாக்குதல்: 4 பேர் பலி!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். தங்களது நிலங்களை மீண்டும் தங்களுக்கே வழங்கிட கோரி பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் போராட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேலை சேர்ந்தவன் 4 பேரை சுட்டுக்கொன்றான்.