Short News

ஹெல்மெட் விற்பனை 20% உயர்வு: ஏன் தெரியுமா?

ஹெல்மெட் விற்பனை 20% உயர்வு: ஏன் தெரியுமா?

சென்னையில் கடந்த ஒருசில நாட்களில் ஹெல்மெட் விற்பனை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. வரும் வாரங்களில் இந்த விற்பனை விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகனங்களின் பின் இருக்கையில் பயணிப்போரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவே இதற்குக் காரணம் ஆகும். கடந்த 24ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலில் உள்ளது.
உ.பி.யில் மர்மக் காய்ச்சல்: 6 வாரங்களில் 79 பேர் பலி!

உ.பி.யில் மர்மக் காய்ச்சல்: 6 வாரங்களில் 79 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெகுவேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். கடந்த 6 வாரங்களில் மட்டும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு 79 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மா நிலம் முழுவதும் மருத்துவமனைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது எந்த வகையான காய்ச்சல் என்பதைக் கண்டறிய 3-டாக்டர்கள் கொண்ட தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்!

பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்!

வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 93.55 புள்ளிகள் உயர்ந்து 37,214.77 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 34.1 புள்ளிகள் அதிகரித்து 11,268.45 புள்ளிகளாக இருந்தது.
பொடுகு பிரச்னை இருக்கா? சர்க்கரையை இப்படி தலையில தேய்ங்க... போயே போயிடும்...

பொடுகு பிரச்னை இருக்கா? சர்க்கரையை இப்படி தலையில தேய்ங்க... போயே போயிடும்...

தலையில் தேங்கி கிடக்கும் இறந்த செல்கள் பொடுகு மற்றும் செதில் செதிலான சருமத்தை நமக்கு தருகிறது. தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு ம் பொடுகு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பொடுகை அப்படியே விட்டு விட்டால் தலை அரிப்பு, புண்கள் உண்டாகி இரத்தம் வெளியேறுதல் போன்ற தீவிர பாதிப்புகளும் உண்டாகிறது. தலையில் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும்.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more