இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது?
ஆட்டோமொபைல்
- 1 day ago
இந்திய ரயில்வேயின் வரலாற்றில் புதிய அத்யாயம் எழுதப்பட்டுள்ளது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கலன் (Hydrogen Fuel Cell) தொழில்நுட்பத்தில் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கி இந்தியா எடுத்து வைத்துள்ள முக்கியமான முன்னேற்றமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.