Short News

புதிய 7 சீட்டர் எம்பிவியை இந்தியாவில் வெளியிடுகிறதா மாருதி

புதிய 7 சீட்டர் எம்பிவியை இந்தியாவில் வெளியிடுகிறதா மாருதி

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் இரண்டு எம்பிவி கார்களை விற்பனை செய்து வருகிறது. ஒன்று எர்டிகா, மற்றொன்று XL6. இதில் எர்டிகா 7 சீட்டராக, சற்று விலை குறைவான காராக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், XL6 எம்பிவியானது 6 சீட்டராக சற்று கூடுதல் இடவசதி கொண்ட ஒன்றாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெயரில் இருக்கும் 6 என்பது 6 சீட்டரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பிறந்த குழந்தைகளுக்காகவே பிராண்ட்-நியூ காரை வாங்கிய தம்பதி!

பிறந்த குழந்தைகளுக்காகவே பிராண்ட்-நியூ காரை வாங்கிய தம்பதி!

டிவி சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நிஜ உலக தம்பதிகள் பலரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வாறான ஒரு இந்தி சின்னத்திரை தம்பதி தான் திவ்யங்கா திரிபாதி- விவேக் தஹியா ஆவர். ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிப்பரப்பப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற 'யே ஹாய் மோஹாப்படின்' என்கிற இந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமாகியவர், நடிகை திவ்யங்கா திரிபாதி ஆவார்.
இதுவரைக்கும் யாருமே செய்யாத காரியத்தை செய்த ஹீரோ!

இதுவரைக்கும் யாருமே செய்யாத காரியத்தை செய்த ஹீரோ!

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம், உலகின் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் விதிவிலக்கு அல்ல.
110 லிட்டர் சிஎன்ஜி டேங்க் உடன் டாடாவின் புதிய இண்ட்ரா வி40

110 லிட்டர் சிஎன்ஜி டேங்க் உடன் டாடாவின் புதிய இண்ட்ரா வி40

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று இண்ட்ரா வி40 என்கிற சிறிய அளவிலான புதிய பை-ஃபியுல் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. CNG மற்றும் பெட்ரோலிலும் இயங்கக்கூடிய இரட்டை-எரிபொருள் வாகனமாக இந்த புதிய டாடா வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.