Short News

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின்!

ஸ்கோடா ரேபிட் காரில் புதிய பெட்ரோல் எஞ்சின்!

மாசு உமிழ்வு குறைப்பதற்காக ஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதே எஞ்சின் ஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோஉள்ளிட்ட கார் மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 200 என்.எம் டார்க் திறனையும் அதிக பெட்ரோல் சிக்கனத்தை தரும் என எதிர்பார்கப்படுகிறது
கருணாநிதி இல்லாத தமிழகமா? - ரஜினி!

கருணாநிதி இல்லாத தமிழகமா? - ரஜினி!

நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க முடியவில்லை, அவரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்," என்றார்.
இந்திய கடற்படைக்கு ரூ.4,941 கோடியில் புதிதாக 6 ரோந்து கப்பல்கள்!

இந்திய கடற்படைக்கு ரூ.4,941 கோடியில் புதிதாக 6 ரோந்து கப்பல்கள்!

இந்திய கடற்படைக்கு ரூ.4,941 கோடியில் புதிதாக 6 ரோந்து கப்பல்கள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துளளது. 
அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு: தமிழத்தில் அடுத்த பரபரப்பு!

அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு: தமிழத்தில் அடுத்த பரபரப்பு!

திமுக செயற்குழு கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது அதிமுகவும் தனது செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 20ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more