Short News

அமேசான் -  பிளிப்கார்ட்டில் இனிமேல் அதிரடி 'ஆஃபர்கள்'!

அமேசான் - பிளிப்கார்ட்டில் இனிமேல் அதிரடி 'ஆஃபர்கள்'!

வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கிய நாள் முதல் அமேசான் இந்தியா நிறுவனத்துடன் போட்டி போட்டு கொண்டு ஆஃபர்களை வாரி வழங்கி வருகிறது. இதில் ஸ்மார்ட் போன்,  வீட்டு உபயோகப்பொருள்களின் விற்பனையை கடந்த ஆண்டுகளைவிட 2 மடங்கு அளவு தற்போது அதிகரித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு இப்போதிருந்தே இரு நிறுவனமும் தொடர்ச்சியாக தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகை வழங்க திட்டமிட்டு வருகின்றது
ஜி.வி.க்கு திருப்பு முனையாக அமையும் சர்வம் தாள மயம்!

ஜி.வி.க்கு திருப்பு முனையாக அமையும் சர்வம் தாள மயம்!

மின்சார கனவும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு சர்வம் தாள மயம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை படத்தை பார்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவிக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என தெரிவித்துள்ளார். 
16 வயதினிலே படத்தில் கமல் ரோலில் நடிக்க இருந்த பிரபல பாடகர்!

16 வயதினிலே படத்தில் கமல் ரோலில் நடிக்க இருந்த பிரபல பாடகர்!

பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் படம் 16 வயதினிலே. இந்த படம் மூன்று பேருக்கும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் 16 வயதினிலே படத்தில் முதலில் தயாரிக்கவிருந்தது வேறு யாருமில்லை, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தானாம்.
நித்யானந்தாவை கலாய்த்த நடிகை பிரியா பவானி சங்கர்!!

நித்யானந்தாவை கலாய்த்த நடிகை பிரியா பவானி சங்கர்!!

மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது அதர்வாவுடன் குருதியாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நித்யானந்தாவை கிண்டல் செய்து டப் ஸ்மாஷ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் மட்டும் 2.2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more