Short News

தங்கம் விலை ஜிவ்வென உயர்வு!

தங்கம் விலை ஜிவ்வென உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.28 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,861 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.22,888 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,030க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40.20 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.40,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்றும் காலையில் அருமையான குளிர் நிலவியது. காலை 7.30 மணிக்கு 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது பகலில் அதிகபட்சமாக 32 டிகிரியாகவும், இரவில் குறைந்தபட்சமாக 26 டிகிரியாகவும் இருக்கும். இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:58, மறைவு: மாலை 06:08; சந்திர உதயம்: பிற்பகல் 02:13, மறைவு: பின்னிரவு 01:56.
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, புரட்டாசி 3; பிறை: வளர்பிறை; திதி: தசமி மறுநாள் நள்ளிரவு 12:31 வரை, பிறகு ஏகாதசி; நட்சத்திரம்: பூராடம் பிற்பகல் 01:26 வரை, பிறகு உத்திராடம்; யோகம்: அமிர்தயோகம்; சூலம்: வடக்கு; ராகுகாலம்: பகல் 12:00 முதல் 01:30 வரை; எமகண்டம்: காலை 07:30 முதல் 09:00 வரை; குளிகை: காலை 10:30 முதல் பகல் 12:00 வரை; நல்ல நேரம்: காலை 09:00-10:00; மாலை 04:00-05:00
இன்று காலை 07:20க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

இன்று காலை 07:20க்கு உங்கள் ஊர்களில் வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.20 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-24; மதுரை-26; கோயம்புத்தூர்-23; திருச்சி-28; திருநெல்வேலி-26; திண்டுக்கல்-24; ஈரோடு-23; சேலம்-25; சிவகாசி-25; தஞ்சாவூர்-26; தூத்துக்குடி-27; திருப்பூர்-24; வேலூர்-26; ஊட்டி-13; கொடைக்கானல்-14; ஏற்காடு-20; ஏலகிரி-22; வேடந்தாங்கல்-27.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more