Short News

ரூ.2,000 நோட் வாபஸ் இல்லை!

ரூ.2,000 நோட் வாபஸ் இல்லை!

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறும் திட்டம் எதுவுமில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் லோக்சபாவில் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக லோக்சாபவில் அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விரைவாக 25வது படத்தை நெருங்கிய விஜய்சேதுபதி!

விரைவாக 25வது படத்தை நெருங்கிய விஜய்சேதுபதி!

விரைவாக 25வது படத்தை நெருகினார் நடிகர் விஜய்சேதுபதி. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி சீதக்காதி திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் அவரும் 24ம் தேதி விஜய்சேதுபதி தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியாக உள்ளது. பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ள இந்த திரைப்படம் பிரமாண்டாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவில் 2,346 மி.மீ. மழை!

கேரளாவில் 2,346 மி.மீ. மழை!

கேரளத்தில் 2346 மி.மீ மழை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை பெய்த மழையின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது. இது இயல்பை காட்டிலும் 42 சதவீதம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்கத் தடை

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்கத் தடை

தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை அறிவியல் கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் செல்போன் உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more