Short News

தங்கத்தின் விலை சிறிது உயர்வு!

தங்கத்தின் விலை சிறிது உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,827 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.22,616 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.29,690க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.39.80 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.39,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
விஜய் சேதுபதியுடன் தீபிகா படுகோனுக்கு திருமணம்?

விஜய் சேதுபதியுடன் தீபிகா படுகோனுக்கு திருமணம்?

மணிரத்னம் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மல்டி ஸ்டார் படமான 'செக்கச் சிவந்த வானம்' வரும் 27ம் தேதி ரிலீஸாகிறது. இதில், விஜய் சேதுபதி நடித்த ஒரு சீன் moviebuffல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடிபோதையில் தாத்தாவுடன் பைக்கில் வந்திரங்கும் சேதுபதி, தனக்கும் தீபிகா படுகோனுக்கும் திருமணம் பேசி முடித்திருப்பதாக பாட்டியிடம் தெரிவித்திருப்பார். இக்காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
மிரட்டி வரும் ஆஃப்கானிஸ்தான்: இந்தியா-182/4 (33)!

மிரட்டி வரும் ஆஃப்கானிஸ்தான்: இந்தியா-182/4 (33)!

ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா, 33 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் பீல்டிங், பவுலிங்கில் மிரட்டி வருகின்றனர். இதனால் தற்போது இந்திய அணி வெற்றி பெற போராடி வருகிறது.
இந்தியாவின் முயற்சியை பாராட்டுகிறேன்- ஐ.நாவில் டிரம்ப் பேச்சு!

இந்தியாவின் முயற்சியை பாராட்டுகிறேன்- ஐ.நாவில் டிரம்ப் பேச்சு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று ஐ.நா. சபையின் 73வது கூட்டம் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அனைத்து நாடுகளும் தங்களின் நாட்டு சவால்களை எதிர்கொள்வது பற்றி நினைத்து வருகிறது. ஆனால், இந்தியா தனது நாட்டில் லட்சக்கணக்கான ஏழைகளை வறுமையில் இருந்து மீட்க போராடி வருகிறது. தற்போது வறுமையில் இருந்தும் மீண்டுள்ளது, இந்த முயற்சியை பாராட்டுகிறேன்" என்றார்
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more