Short News

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பிராண்ட் அம்பாசட்ரானார் 'ஜோ'!

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு பிராண்ட் அம்பாசட்ரானார் 'ஜோ'!

சூர்யா மனைவியும் நடிகையுமான ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் மீண்டும் என்ட்ரியானார். தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வரும் ஜோதிகா, தமிழக அரசின் 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்' என்ற திட்டத்திற்கு நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமாகி, அதற்கு பிராண்ட் அம்பாசடராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் ஒரு அரவேக்காடு- அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்!

கமல் ஒரு அரவேக்காடு- அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்!

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக முடியவில்லை என்ற விரக்தியிலும், கமல் அரசியல் தெரியாமல் அரவேக்காட்டுத்தனமாகவும் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், கருணாஸ் மட்டுமல்ல அவதூறு பரப்பும் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றார்.
சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன் என்று அறியப்படுகிறது. ராஜசேகரன் தனது 12வது வயதிலேயே குண்டலினி சக்தி எழுதும் ஆற்றம் பெற்றார், இமயமலையில் இருந்து ஒரு சாமியார் தான் ராஜசேகரனுக்கு பரமஹம்ச நித்தியானந்தா என பெயரை சூட்டினார் என வரலாறு கூறுகிறது.

மேலும், நித்தியானந்தா குறித்த பலரும் அறியாத உண்மைகள் பற்றி அறிந்துக் கொள்ள முழுக் கட்டுரை உள்ளே படிங்க.

கன்னியாஸ்திரி ரேப் வழக்கு: சில்மிஷ பிஷப் கைது?

கன்னியாஸ்திரி ரேப் வழக்கு: சில்மிஷ பிஷப் கைது?

கோட்டயம் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிஷப் பிராங்கோவிடம் 5 பேர் கொண்ட குழு 3வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று அவரிடம் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் பிஷப் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more