Short News

சமையலர் பாப்பாளுக்கு ஆதரவாக குரல்  கொடுத்த இயக்குனர்!

சமையலர் பாப்பாளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர்!

திருப்பூர் அருகே திருமலைக்கவுண்டம் பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சமயலராக பணியாற்றி வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சமையலர் பாப்பாள் மீது மதிய உணவில் பல்லி இருந்ததாக போலீஸாரிடம் பொய் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இயக்குனர் நவீன், "நூற்றாண்டுகள் கடந்தும் உங்களுக்கு அடிமைகளாகவே இருக்கவேண்டும். மனித வாழ்வை கூட வாழ்ந்து பார்த்திட கூடாது.அப்படித்தானே? என்று பதிவிட்டுள்ளார்
கசகசாவில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

கசகசாவில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

கசகசாவில் அதிக அளவில் கரையாத நார்சத்துகள் இருக்கிறது. இதை சாப்பிட்டால் முறையான செரிமானம் உண்டாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் கசகசா அடங்கிய உணவுகளை அதிக அளவில் உட்கொண்டால் விரைவில் இரத்த அழுத்தம் கட்டுபடுத்த முடியும். கசகசா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
எஸ்-க்ராஸ் பெட்ரோல் கார் விரைவில் !

எஸ்-க்ராஸ் பெட்ரோல் கார் விரைவில் !

மாருதி சுஸூகியின் எஸ் க்ராஸ் காரில், டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே உள்ளது. இந்த காரின் நேரடி போட்டியாளர் ஹூண்டாய் கிரெட்டா. இந்த காரில் பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களையும் வழங்குகிறது. எனவே ஹூண்டாய் கிரெட்டாவின் போட்டியை சமாளிக்க, எஸ் க்ராஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்டை, ரூ. 8.1 லட்சத்திற்கு மாருதி சுஸூகி மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தகவல் தெரிவிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு!

தகவல் தெரிவிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு!

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தனியார் நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேல்ம் தகவல் தெரிவிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more