Short News

நவம்பரில் ராஜமௌலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

நவம்பரில் ராஜமௌலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

'பாகுபலி', 'பாகுபலி 2' என மிகப் பிரம்மாண்ட படங்களை இயக்கி சரித்திர சாதனை படைத்த எஸ்.எஸ்.ராஜமௌலி, அடுத்து ரூ.250 கோடி பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் 'யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இணைந்து நடிக்கவுள்ளனர். படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை மழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்!

மழை மழை: 5 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்!

தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. பலத்த மழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும்.
காலமானார் மாஜி கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர்!

காலமானார் மாஜி கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று இரவு காலமானார்; அவருக்கு வயது 77. உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கடந்த 1966 முதல் 1974 வரை அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலையில் வழக்கமான வெப்பம் இருந்தது. காலை 8 மணிக்கு 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று இரவில் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றைய சூரிய உதயம்: காலை 05:57, மறைவு: மாலை 06:30; சந்திர உதயம்: காலை 10:27, மறைவு: இரவு 10:37.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more