Short News

‘விஸ்வரூபம்-2 படத்துக்கு தடையில்லை!

‘விஸ்வரூபம்-2 படத்துக்கு தடையில்லை!

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் 'விஸ்பரூபம்-2' படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்நிலையில், ‘மர்மயோகி' படம் தயாரிக்க கமல் வாங்கிய ரூ.4 கோடியை வட்டியுடன் தரவேண்டும் இல்லையென்றால்  விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது . இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், படத்துக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த பார்ட்டி 'செம'!

நடிகை பிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த பார்ட்டி 'செம'!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸின் நிச்சயதார்த்தம் இன்று இரவு மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. இவரின் நிச்சயதார்த்தம் பாரம்பரிய சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நிச்சயதார்த்த பார்ட்டியில் ரன்வீர் சிங், கரண் ஜோகர், ரவீனா டாண்டன் பர்ணித்தி சோப்ரா உள்ளிட்ட ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் கலந்துக்கொண்டது
கேரளாவுக்கு  ரூ.10 லட்சம் அளித்த பிரம்மாண்ட இயக்குனர்!

கேரளாவுக்கு ரூ.10 லட்சம் அளித்த பிரம்மாண்ட இயக்குனர்!

கனமழையால் கடும் இழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா பிரபலங்கள், மாநில முதல்வர்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குனர் சங்கர் கேரள மாநிலத்திற்கு நிவாரண தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் நிதியுதவி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள மக்களுக்கு கை கொடுத்த 'டாடா'!

கேரள மக்களுக்கு கை கொடுத்த 'டாடா'!

தொடர் கன மழையால் கேரள மாநிலமே உருக்கலைந்து போயுள்ளது. இந்த சூழ்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள டாடா கார்களை வீடு தேடிச்சென்று டோ செய்து சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும் பணியை டாடா நிறுவனம் இலவசமாக வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கேரளாவில் வெள்ள நீர் வடிந்த பின்பு இந்த நடவடிக்கையை டாடா நிறுவனம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more