Short News

காதலன் இல்லாததற்கு காரணம் சொன்ன நடிகை!

காதலன் இல்லாததற்கு காரணம் சொன்ன நடிகை!

தமிழ் சினிமாவில், சமுத்திரக்கனி இயக்கிய சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், என்னோட வேலை உண்டு அப்படினு தான் இருப்பேன். இதுவரைக்கும் நான் காதலிக்கவில்லை. இப்போதுவரை எனக்கு ஆள் இல்லை. அதனால், தான் என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வரவில்லை என கூறியுள்ளார்.
டெக்னோவில் ரூ.6,799க்கு அட்டகாசமான ஸ்மார்ட்போன்

டெக்னோவில் ரூ.6,799க்கு அட்டகாசமான ஸ்மார்ட்போன்

டெக்னோவின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களில் ஃபேஸ் அன்லாக் என்ற புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், குவாட்கோர் மீடியாடெக் சிப்செட் தொழில்நுட்பம், 6.0 இன்ச் ஹெச்.டி. 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆடி ஆர்.எஸ்-6 ரிலீஸ்!

புதிய ஆடி ஆர்.எஸ்-6 ரிலீஸ்!

மிகவும் சக்திவாய்ந்த திறன் கொண்ட புதிய ஆடி ஆர்எஸ்-6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டேஷன் வேகன் ரகத்தை சேர்ந்த இந்த காரில் 4.0 லிட்டர் பெட்ரோல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 597 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் வாய்ந்தது. இந்த ஆடி ஆர்எஸ்-6 காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.56 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் பர்யாப் மாகாணத்தில் செனயா ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தீடீர் தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ராணுவ முகாமை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் இருந்த 40 ராணுவ வீரர்களை தலிபான்கள் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more