Short News

கமலிடம் உண்மையை சொன்ன யாஷிகா

கமலிடம் உண்மையை சொன்ன யாஷிகா

மகத் மீது காதலில் விழுந்ததாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.காதலி இருக்கிறார், அவரை மிஸ் பண்ணுகிறேன் என்று கூறிக் கொண்டே மகத் யாஷிகாவுடன் நெருக்கமாக பழகுகிறார். இதை பார்த்த பார்வையாளர்கள் மட்டும் அல்ல பிக் பாஸுக்கும் இது நட்பு இல்லை என்பது புரிந்தது.பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண் மகத், யாஷிகா இடையேயான உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா என்று கேட்க அனைவரும் ஆமாம் என்றார்கள்.  
இன்று முதல் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்!

இன்று முதல் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்!

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று இந்தோனேசியாவில் தொடங்குகின்றன. வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்தப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக 524 விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் 36 விதமான போட்டிகளில் ஆட உள்ளனர். தமிழக வீரர்கள்-வீராங்கனைகளும் இதில் பதக்கங்களைக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் மோடி: வெள்ள பாதிப்பு பகுதிகளில் இன்று ஆய்வு!

கேரளாவில் மோடி: வெள்ள பாதிப்பு பகுதிகளில் இன்று ஆய்வு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவின் வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று பார்வையிட உள்ளார். இதற்காக அவர் நேற்று மாலையே டெல்லியிலிருந்து கிளம்பி தனி விமானத்தில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளார் மோடி.
அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஆக.23க்கு ஒத்திவைப்பு!

அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஆக.23க்கு ஒத்திவைப்பு!

அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இக்கூட்டம் வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு செயற்குழுக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் நடைபெறும் என முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more