Short News

ஜானவியின் இரண்டாவது படம்!

ஜானவியின் இரண்டாவது படம்!

தடக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜானவி கபூர். இந்நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிப்பில் தனது இரண்டாவது படத்தை நடிக்கிறாராம் ஜானவி. மேலும் இதே படத்தில் ரன்வீர்சிங், கரீனா, ஆலியாபட் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
100 சதவீத நடிப்பை கொடுத்தேன்: சமந்தா எமோஷன்!

100 சதவீத நடிப்பை கொடுத்தேன்: சமந்தா எமோஷன்!

கன்னட மொழியில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற யுடர்ன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார் சமந்தா. நாயகியைமை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் சமந்தா.
'சீமராஜா'வின் ‘வரும் ஆனா வராது’ ரிலீஸ்!
<iframe width="550" height="275" src="https://www.youtube.com/embed/TRuRoECzqgU" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

'சீமராஜா'வின் ‘வரும் ஆனா வராது’ ரிலீஸ்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 3வது முறையாக நடித்துள்ள படம் 'சீமராஜா'. இந்த படத்திற்கு படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'சீமராஜா படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் வரும் விநாயக சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘வரும் ஆனா வராது' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
”லஸ்ட் ஸ்டோரிஸ் என் வாழ்க்கை அர்த்தமாக்கியுள்ளது!”

”லஸ்ட் ஸ்டோரிஸ் என் வாழ்க்கை அர்த்தமாக்கியுள்ளது!”

தோனி படத்தில் நாயகியாக நடித்து பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை கியாரா அத்வானி. இவர் சமீபத்தில் நடித்து வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தனது நடிப்பால் ரசிகர்களை மயக்கி இருந்தார் கியாரா. இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் படத்திற்கு பின்னர் தனது வாழ்க்கை மாறியுள்ளதாக கியாரா கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more